மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பித்தோராகர் பகுதியில் மீன் வளர்ப்புத் திட்டங்களை மத்திய மீன்வளத் துறைச் செயலாளர் ஆய்வு செய்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2026 2:01PM by PIB Chennai

மத்திய அரசின் மீன்வளத் துறைச் செயலாளர் திரு அபிலக்ஷ் லிக்கி, உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் இன்று (19 அக்டோபர் 2026) பித்தோராகர் குளிர்நீர் மீன்வளக் குழுமம் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

இமயமலைப் பகுதியில் உள்ள குளிர்நீர் மீன்வளத்தின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இந்திய அரசு நாடு முழுவதும் 34 மீன்வளக் குழுமங்களையும், பித்தோராகரில் ஒரு குளிர்நீர் மீன்வளக் குழுமத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சந்தை இணைப்புகளை வலுப்படுத்துதல், மீன்களின் மதிப்புக்கூட்டலை ஊக்குவித்தல், மீன் உற்பத்தியாளர்களுக்கு சிறந்த விலையை உறுதி செய்தல் ஆகியவற்றின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

ஆய்வின் போது, பித்தோராகர் மாவட்ட ஆட்சியர் திரு ஆஷிஷ் குமார் பட்கைன், மாவட்டத்தில் மீன்வளத் துறையில் எட்டப்பட்ட சாதனைகளின் ஒரு கண்ணோட்டத்தை வழங்கினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2325058&reg=3&lang=1

****

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325263) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi