நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தில் ரூ.19.41 கோடி மதிப்புள்ள 13 கிலோ வெளிநாட்டுத் தங்கம் பறிமுதல் - மூவர் கைது: வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2026 4:18PM by PIB Chennai

அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், சூரத் சர்வதேச விமான நிலையம் ஆகியவை வழியாக வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இந்தியாவிற்குள் கொண்டுவந்த ஒரு தங்கக் கடத்தல் கும்பலின் கடத்தல் நடவடிக்கையை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் முறியடித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற உளவுத் தகவலின் அடிப்படையில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், 2026 அக்டோபர் 16 முதல் 42 மணி நேரத்திற்கு ஒருங்கிணைந்த சோதனைகளை நடத்தினர். இந்த நடவடிக்கை, விமானப் பயணம் மூலமான கடத்தலைத் தடுக்க வகையில் மேற்கொள்ளப்பட்டது. இதில், சுமார் ரூ. 19.41 கோடி மதிப்புள்ள 13.017 கிலோ வெளிநாட்டுத் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கத்தை மறைத்தல், விமானங்கள் மூலம் கடத்துதல், உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்தல் என ஒவ்வொரு இணைப்பையும் குறிவைத்து, தங்க கடத்தல் நடவடிக்கையை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் முறியடித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325125&reg=3

****

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325256) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , Assamese , Telugu