பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மையே சேவை இயக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது பெட்ரோலிய அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2026 12:47PM by PIB Chennai

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம், அதன் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், அதனுடன் இணைக்கப்பட்ட அலுவலகங்களுடன் இணைந்து, 2026 செப்டம்பர் 17 முதல் 2026 அக்டோபர் 02 வரை நடைபெற்ற தூய்மையே சேவை இயக்கத்தில் பங்கேற்றது.

இந்த இயக்கத்தின் முக்கிய சாதனைகள்:

இதில் அமைச்சகமும் அதன் அமைப்புகளும், அடையாளம் காணப்பட்ட இடங்களில் தூய்மை நடவடிக்கைகளை மேற்கொண்டன.

* 99,548 பேரின் பங்கேற்புடன் 9,845 இடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

* 45,526 பங்கேற்பாளர்களின் பங்களிப்புடன் 937 பொது இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.

* இந்த இயக்கத்தின் கீழ், நீர்நிலைகளின் தூய்மையையும் பாதுகாப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, 1,264 நபர்களின் பங்கேற்புடன் நீர்நிலைகளில் 143 தூய்மை இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன.

* இளைஞர்களிடையே தூய்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக, இந்தப் இயக்கத்தில் மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், சமூகப் ஆர்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

* இந்த செயல்பாடுகளில் மொத்தம் 18,700 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

* சிறப்பு முகாம்களில் 7,098 தூய்மைப் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தூய்மையான, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்கும் வகையில், பெட்ரோலிய அமைச்சகம் சுற்றுச்சூழல் பொறுப்புணர்விலும் சமூகப் பங்கேற்பை ஊக்குவிப்பதிலும் தொடர்ந்து உறுதியுடன் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2325030&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325184) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी