ஆயுஷ்
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முக்கிய கல்விசார் வெளியீடுகள், டிஜிட்டல் அறிமுகங்களுடன் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் 10-வது நிறுவன தினக் கொண்டாட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2026 9:38PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் (ஏஐஐஏ) குழந்தை நல மருத்துவத் துறை (கௌமாரப்ரித்யா) ஏற்பாடு செய்திருந்த, மூன்று நாள் சர்வதேச மாநாடான 'கௌமாரகான் 2026', ஆயுர்வேத முறையில் குழந்தைகளுக்கான சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவது குறித்த சர்வதேச அளவிலான அறிவியல் விவாதங்களுடன் சனிக்கிழமையன்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டின் நிறைவு நாள், நிறுவனத்தின் 10-வது நிறுவன தினத்துடன் இணைந்து அமைந்திருந்தது. ஆயுர்வேதக் கல்வி, ஆராய்ச்சி, மருத்துவச் சிறப்பு, உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றில் கடந்த பத்தாண்டுகளாக அந்நிறுவனம் அடைந்த முன்னேற்றங்கள் இந்த நிகழ்வின் மூலம் கொண்டாடப்பட்டன.
இந்த மாநாடு சர்வதேச நிபுணர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் துறைப் பிரதிநிதிகளை ஒன்றிணைத்தது. இதில், குழந்தைகள் நல சுகாதாரப் பராமரிப்பில் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய, ஒருங்கிணைந்த மருத்துவத்தின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. அறிவியல் ரீதியான உறுதிப்படுத்தல், துறைகளுக்கு இடையிலான ஆராய்ச்சி மற்றும் தடுப்புச் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324808®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2325150)
வருகையாளர் எண்ணிக்கை : 5