மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்டில் மீன் வளர்ப்புப் பண்ணைகளை ஆய்வு செய்தார் மத்திய மீன்வளத் துறைச் செயலாளர் திரு அபிலாக்ஷ் லிக்கி

இடுகை இடப்பட்ட நாள்: 18 OCT 2026 2:31PM by PIB Chennai

மத்திய மீன்வளத் துறைச் செயலாளர் திரு அபிலாக்ஷ் லிக்கி, இமயமலைப் பகுதியில் குளிர்நீர் மீன் வளர்ப்பு மேம்பாட்டின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக, உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகர் மாவட்டம், முன்சியாரி பகுதிக்கு இன்று (18 அக்டோபர் 2026) பயணம் மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தின் போது, அவர் முன்சியாரியில் உள்ள ஒரு நன்னீர் மீன் பண்ணையை பார்வையிட்டார்‌. மீன் வளர்ப்பை ஒரு நிலையான வாழ்வாதாரமாக மாற்றுவதில் உள்ளூர் கூட்டுறவு சங்கங்களின் முன்னோடிப் பங்கை அவர் பாராட்டினார். பனிப்பாறை நீரோடைகள், உகந்த நீர் வெப்பநிலை ஆகியவற்றைக் கொண்ட முன்சியாரி, நன்னீர் மீன் வளர்ப்பிற்கான ஒரு மையமாக உருவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 

மத்திய அரசு நாடு முழுவதும் 34 மீன்வளத் தொகுப்புப் பகுதிகளை அறிவித்துள்ளது. இமயமலைப் பகுதியில் மீன்வளக் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தவும், வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்தவும், நிலையான மீன்வள வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பிரதமரின் மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன்சியாரி பகுதி குளிர் நீர் மீன்வளப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறை செயலாளரின் இந்தப் பயணம், உத்தரகாண்ட்டிலும் பிற இமயமலைப் பகுதிகளிலும் நன்னீர் மீன் வளர்ப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324891&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2324950) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी