ஜல்சக்தி அமைச்சகம்
குடிநீர் விநியோகம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்ட உரையாடல் நிகழ்வு
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 3:08PM by PIB Chennai
ஜல் ஜீவன் இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் சமூக உரிமை, நீர் ஆதார நிலைத்தன்மை, சேவை வழங்குதலை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியர்களின் 13-வது நீர் உரையாடல் நிகழ்விற்கு குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை ஏற்பாடு செய்திருந்தது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்வானது, மாவட்ட ஆட்சியர்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் திட்ட இயக்குநர்களை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்றது.
இதற்கு குடிநீர் மற்றும் சுகாதாரத் துறைச் செயலாளர் திரு அசோக் கே கே மீனா தலைமைத் தாங்கினார். அப்போது பேசிய அவர், இதுபோன்ற நிகழ்வு மாவட்ட நிர்வாகங்கள் புதுமையான நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், கிராமப்புற குடிநீர் சேவை விநியோகத்தில் உள்ள நடைமுறை சவால்களை எதிர்கொள்ள உதவுவதாகத் தெரிவித்தார். உள்ளூர் நீர் நிர்வாகத்தை வலுப்படுத்துவதிலும், கிராமப்புற நீர் விநியோக அமைப்புகளின் திறமையானச் செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதிலும் மாவட்ட ஆட்சியர்களின் முக்கிய பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தார். அப்போது தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், திரிபுரா, ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் கிராமப்புற குடிநீர் வழங்கல் நிர்வாகத்தில் உள்ள புதுமையான நடைமுறைகளை விளக்கினர் .
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323811®=3&lang=1
***
SK/IR/SM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324926)
வருகையாளர் எண்ணிக்கை : 8