நிலக்கரி அமைச்சகம்
தூய்மைப் பணிகளுக்கான சிறப்பு இயக்கத்தின் கீழ் மின்னணுகழிவுகள் மேலாண்மையில் ஈடுபட்ட நிலக்கரி அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 4:05PM by PIB Chennai
தூய்மைப் பணிகளுக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ் நிலக்கரி அமைச்சகமானது, தமது அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் தூய்மைப்பணி, இடத்தை திறமையாக பயன்படுத்துவது, கழிவு மேலாண்மை ஆகிவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக புதுதில்லியில் உள்ள ஜிபிஓஏ-3-ன் பிரதான நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக மையத்தில் மின்னணு கழிவு சேகரிப்பு இயக்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மத்திய நிலக்கரி துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே ஆகியோர் பங்கேற்று பயன்படுத்தப்பட்ட மின்னணு பொருட்களை அம்மையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323855®=3&lang=1
***
SK/IR/SM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324924)
வருகையாளர் எண்ணிக்கை : 9