PIB Backgrounder
azadi ka amrit mahotsav

ஊட்டச்சத்து நிறைந்த கருநீல உருளைக்கிழங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 18 OCT 2026 1:44PM by PIB Chennai

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனமான ஐசிஏஆர் - சிபிஆர்ஐ (ICAR-CPRI) குஃப்ரி நீலகண்டம், குஃப்ரி மாணிக், குஃப்ரி ஜமுனியா உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த வண்ண உருளைக்கிழங்கு வகைகளை உருவாக்கியுள்ளது. இந்த வகைகளில் ஆந்தோசயனின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற முக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நுண்ணூட்டச்சத்துக்களும் உள்ளன. அவற்றுள், குஃப்ரி ஜமுனியா அதிக அளவு வைட்டமின் சி, ஆந்தோசயனின்கள், கரோட்டினாய்டுகளைக் கொண்டிருக்கிறது.

 மக்கள் போதுமான உணவை உட்கொண்டாலும், அவர்களின் உணவில் அத்தியாவசிய வைட்டமின்களும் தாதுக்களும் பற்றாக்குறையாக இருக்கும்போது மறைமுக பசி ஏற்படுகிறது. இந்தச் சவாலை எதிர்கொள்ள, விஞ்ஞானிகள் மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து மதிப்புடன் கூடிய உயிரிவளமூட்டப்பட்ட பயிர்களை அதிக அளவில் உருவாக்கி வருகின்றனர். உயிரிவளமூட்டல் என்பது தாவர இனப்பெருக்கம் மூலம் பயிர்களின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் உணவு, இயற்கையாகவே அதிக அளவிலான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. பதப்படுத்தும் போது ஊட்டச்சத்துக்களைச் சேர்க்கும் வழக்கமான உணவு வளமூட்டலைப் போலல்லாமல், உயிரிவளமூட்டல் முறையில் ஊட்டச்சத்து நேரடியாகப் பயிரில் ஒருங்கிணைக்கப்படுகிறது. இது பொதுவாக ஊட்டச்சத்துத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு நிலையான மற்றும் செலவு குறைந்த அணுகுமுறையாக அமைகிறது. இது நீண்டகால ஊட்டச்சத்துப் பாதுகாப்பையும் வலுப்படுத்துகிறது.

உயிர்ச்சத்து செறிவூட்டல் ஆராய்ச்சியின் ஒரு முக்கிய விளைவாக, மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து மதிப்புடன் கூடிய வண்ண உருளைக்கிழங்கு வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிவப்பு, ஊதா, நீல நிற சதை கொண்ட உருளைக்கிழங்குகள் அடங்கும். இந்த உருளைக்கிழங்குகளில் இயற்கை நிறமிகள் உள்ளன. அவை அவற்றிற்குத் தனித்துவமான வண்ணங்களை அளிக்கின்றன. வண்ண உருளைக்கிழங்குகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்பு , துத்தநாகம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

குஃப்ரி ஜாமுனியா சாகுபடிக்கு ஏற்ற மாநிலங்கள்:

பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு, ஒரு பயிர் இரகம் வெவ்வேறு வேளாண் பருவநிலை சூழல்களில் நம்பகத்தன்மையுடன் செயல்பட வேண்டும். குஃப்ரி ஜாமுனியா ரகம், பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் நிலையான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதுடன், வட இந்திய சமவெளிகளில் சாகுபடி செய்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கு பரவலாகப் பயிரிடப்படும் பல மாநிலங்களுக்கு இந்த ரகம் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. இதன் கவர்ச்சிகரமான தோற்றம், பல்துறை சமையல் பயன்பாடு, வட இந்திய சமவெளிகளின் பல மாநிலங்களுக்கு ஏற்ற தகவமைப்புத் தன்மை ஆகியவற்றால், குஃப்ரி ஜாமுனியா எதிர்காலத்தில் பரவலான சாகுபடிக்கும், நுகர்வுக்குமான வலுவான ஆற்றலைக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324875&reg=48&lang=1  

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2324895) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati