பாதுகாப்பு அமைச்சகம்
இங்கிலாந்தின் பிளைமவுத் துறைமுகப் பகுதியில் 'கொங்கன்-26' பயிற்சி நிறைவடைந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2026 9:06PM by PIB Chennai
இந்தியா, இங்கிலாந்து இடையிலான இருதரப்பு கடல்சார் பயிற்சியான 'கொங்கன்-26', கடந்த 15-ம் தேதி இங்கிலாந்தின் பிளைமவுத் துறைமுகப் பகுதியில் நிறைவடைந்தது. 2026 அக்டோபர் 8 முதல் 15 வரை நடைபெற்ற இந்தப் பயிற்சியின் வாயிலாக, இந்திய, இங்கிலாந்து கடற்படை வீரர்கள், பல்வேறு தொழில்முறை மற்றும் செயல்பாட்டுத் தளங்களில் இணைந்து செயல்படும் வாய்ப்பைப் பெற்றனர்.
இந்தியக் கடற்படை சார்பில் ஐஎன்எஸ் திரிசூல் போர்க்கப்பலும், இங்கிலாந்து சார்பில் ஹெச்எம்எஸ் சதர்லேண்ட் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பலும் பங்கேற்றன. இந்தப் பயிற்சியை இங்கிலாந்து கடற்படையின் கடற்படை செயல்பாட்டுத் தரநிலைகள் மற்றும் பயிற்சிப் பிரிவு நடத்தியது.
2026 அக்டோபர் 12 முதல் 15 வரை கடலில் நடைபெற்ற நான்கு நாள் தீவிர பயிற்சிகளில், பல்வேறு அச்சுறுத்தல்கள் நிறைந்த சூழலில், கப்பல்களின் மேம்பட்ட இயக்க உத்திகள், கூட்டு தந்திர பயிற்சிகள், தகவல் தொடர்பு நடைமுறைகள், மேற்பரப்பு சமச்சீரற்ற போர்முறை, நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை, ஆயுதப் பயிற்சிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய பயிற்சிகள், இதில் பங்கேற்ற பிரிவுகளுக்கு இடையிலான ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தூம் வகையில் அமைந்திருந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324800®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324864)
வருகையாளர் எண்ணிக்கை : 6