நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மத்தியப் பிரதேசப் பிரிவு சார்பாக போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

இடுகை இடப்பட்ட நாள்: 17 OCT 2026 7:37PM by PIB Chennai

இளைஞர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மத்தியப் பிரதேசப் பிரிவு , 2026 அக்டோபர் மாதத்தில் நீமுச், ஜாவ்ரா, ஜாவாத், மந்தசௌர், கரோத் ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. இந்த நிகழ்ச்சிகள், போதைப்பொருள் தடுப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் 'போதைப்பொருள் இல்லாத இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தன.

நிகழ்ச்சிகள் முழுவதும், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டது. விழிப்புணர்வு அமர்வுகள், வினாடி வினா  போட்டிகள், அறிவுப்பூர்வமான காணொலிகள், விளக்கக்காட்சிகள், தியானம், சுவரொட்டி வடிவமைப்பு முதலிய செயல்பாடுகளில் இந்த நிகழ்ச்சிகள் கவனம் செலுத்தின. பங்கேற்பாளர்கள், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராகக் குரல் கொடுக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளைப் பின்பற்றவும், போதைப்பொருள்  இல்லாத நாட்டை உருவாக்கும் முயற்சியில் பங்களிக்கவும் ஊக்குவிக்கப்பட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324759&reg=3&lang=1  

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2324859) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी