தேசிய மனித உரிமைகள் ஆணையம்
மகாராஷ்டிராவில் தொழிற்சாலைக் கழிவுநீர் கசிவு காரணமாக ஆழ்துளைக் கிணற்று நீர் மாசுபட்டதாகப் புகார் - தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 5:47PM by PIB Chennai
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள அம்பாட் தொழிற்பேட்டைக்கு அருகிலுள்ள தத்தாநகர் பகுதியில், தொழிற்பேட்டைகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீர் கசிவின் காரணமாக ஆழ்துளைக் கிணற்று நீர் மாசுபட்டுள்ளதாக வெளியான ஊடக செய்தி ஒன்றை , தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. தகவல்களின்படி, அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக மாசுபட்ட நீர் காரணமாக சிரமப்பட்டு வருகின்றனர்.
செய்தியின் உள்ளடக்கங்கள் உண்மையாக இருந்தால், அவை மனித உரிமை மீறல் தொடர்பான கடுமையான பிரச்சினைகளை எழுப்புகின்றன என்று ஆணையம் கூறியுள்ளது. எனவே, இது குறித்து மகாராஷ்டிர தலைமைச் செயலாளர் இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், மகாராஷ்டிர மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமும் ஆணையம், விவரங்களைக் கோரியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324434®=3&lang=1
(Release ID : 2324434)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324735)
வருகையாளர் எண்ணிக்கை : 11