சுரங்கங்கள் அமைச்சகம்
தூய்மையே சேவை இயக்கத்தில் சுரங்க அமைச்சகம் தீவிர பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2026 5:15PM by PIB Chennai
சுரங்க அமைச்சகமும், அதன் கள அலுவலகங்களும், தூய்மையே சேவை இயக்கம் 2026-ல் தீவிரமாகப் பங்கேற்றுள்ளன. தூய்மையான, ஆரோக்கியமான இந்தியாவிற்கான கூட்டு நடவடிக்கையாக, பொது இடங்களைத் தூய்மைப்படுத்துதல் தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்விற்கான முன்முயற்சிகள் ஆகியவற்றின் மூலம், தூய்மையில் தனது உறுதிப்பாட்டை அமைச்சகம் மீண்டும் எடுத்துரைத்துள்ளது.
சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு கேசவ் சந்திரா தலைமையில், தூய்மை, சுகாதாரம், நிலையான நடைமுறைகளுக்கான அமைச்சகத்தின் கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மத்திய சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, புதுதில்லி, சாணக்கியபுரியில் உள்ள யஷ்வந்த் பேலஸ் சந்தைப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தூய்மைப் பணி இயக்கத்தில் பங்கேற்றார்.
சுரங்க அமைச்சகத்தின் ஏறபாட்டின் கீழ், 10,723 பங்கேற்பாளர்கள் இந்த முயற்சிக்கு பங்களித்தனர். 5,498 நபர்களின் பங்கேற்புடன் 59 பொது இடங்கள் சுத்தம் செய்யப்பட்டன. தூய்மையை ஊக்குவிக்கவும், பொது இடங்களை மேம்படுத்தவும், கூட்டுப் பொறுப்புணர்வை வளர்க்கவும் அமைச்சகம் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324685®=3&lang=1
(Release ID : 2324685)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324729)
வருகையாளர் எண்ணிக்கை : 8