சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் பிரதமரின் அஜய் திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2026 6:26PM by PIB Chennai

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதமரின் அஜய் திட்டத்தின் மாதிரி கிராமங்கள் பிரிவின் கீழ், நாடு முழுவதும் சுமார் 47,200 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 47.79 லட்சத்திற்கும் அதிகமான குடிமக்கள் பயனடைந்துள்ளனர். மேலும், 46,944 வளர்ச்சிப் பணிகள் முடிக்கப்பட்டு, 27,032 கிராம மேம்பாட்டுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

 

அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, 2026 செப்டம்பர் 8-ம் தேதி நிலவரப்படி, 18,093 கிராமங்கள் மாதிரி கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது, பட்டியலின மக்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களில் உள்கட்டமைப்பு, அடிப்படைச் சேவைகள், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக அமைச்சகம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.

 

2021-22 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுகளில், இந்தத் திட்டக்கூறின் கீழ் மாநிலங்களுக்கு நேரடியாக சுமார் ரூ. 1,730 கோடி வழங்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். இந்த உதவியின் மூலம் 2.5 லட்சத்திற்கும் அதிகமான தனிநபர்களும், குழுக்களும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளையும் வாழ்வாதார வாய்ப்புகளையும் பெற்றுள்ளதாகவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324472&reg=3&lang=1

***

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324725) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी