மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தூய்மைப் பணிகளுக்கான சிறப்பு இயக்கத்தை செயல்படுத்தும் மீன்வளத் துறை
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 4:49PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை தூய்மைப் பணிகளுக்கான சிறப்பு இயக்கம் 6-ஐ தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. தூய்மையை நிறுவனமயமாக்குதல், நிலுவையில் உள்ள பணிகளைக் குறைத்தல், பதிவேடு மேலாண்மையை மேம்படுத்துதல், மின்னணுக் கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றுதல், அலுவலக இடத்தின் பயன்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்த இயக்கம் கவனம் செலுத்துகிறது. நிர்வாக சீர்திருத்தங்கள், பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க, இந்த இயக்கம் மீன்வளத் துறையின் கீழ்நிலை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
இந்த இயக்கத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, இந்த துறையின் ஒருங்கிணைப்பு அதிகாரி, புது தில்லியில் நேற்று (15 அக்டோபர் 2026) ஆய்வு செய்தார். செயல்பாட்டுக் கட்டம் 31 அக்டோபர் 2026 வரை தொடர்வதால், சிறப்பு இயக்கம் 6-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய இத்துறை தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324380®=3&lang=1
(Release ID : 2324380)
****
SK/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324492)
வருகையாளர் எண்ணிக்கை : 11