நிதி அமைச்சகம்
பயணிகள் இன்றி அனுப்பப்படும் உடைமைகள் மூலம் கடத்த முயன்ற 6.20 கிலோ தங்கம் பறிமுதல்; மூவர் கைது
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 6:28PM by PIB Chennai
பயணிகள் இன்றி வரும் உடைமைகளுக்கான வழித்தடத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் புதிய மற்றும் நுணுக்கமான கடத்தல் முறையை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) கண்டறிந்துள்ளது. இந்த கும்பலானது, சரக்குகிடங்கு பணியாளர்கள், இடைத்தரகர்களை பயன்படுத்தி, கடத்தப்பட்ட தங்கத்தை வெளியே எடுத்து, அதை உரிய நபரிடம் ஒப்படைக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளது.
திருவனந்தபுரம் விமானநிலைய சரக்கு வளாகத்தில், உரிமையாளர் உடன் இல்லாத உடமை ஒன்றை டிஆர்ஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதை சோதித்தபோது, பல்வேறு பொருட்களுக்குள் மிகவும் தந்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 9.18 கோடி மதிப்பிலான 6.28 கிலோ வெளிநாட்டுத் தங்கம் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள், எண்களை பயன்படுத்தி திறக்கும் பூட்டுடன் கூடிய டிராலியில் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து சரக்கு கிடங்கு ஊழியர் டிராலியை திறந்து, தங்கம் மறைக்கப்பட்ட பொருட்களை இடைத்தரகரிடம் ஒப்படைத்து, அவர் தங்கத்தை வாங்குபவரிடம் வழங்கும் வகையில் கடத்தல் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சோதனைக்குப் பிறகு, கடத்தல் கும்பலில் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324042®=3&lang=1
***
SK/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324483)
வருகையாளர் எண்ணிக்கை : 7