சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளி என்ற நிலையிலிருந்து தொழில்முனைவோர் வரை: நமஸ்தே திட்டத்தின் கீழ் திரு சஞ்சய் குமாரின் நிதிச் சுதந்திரம் நோக்கிய பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 3:12PM by PIB Chennai
நிறுவனக் கடனுதவி, மூலதன மானியத்திற்கான நடைமுறைகள் போன்றவை, துப்புரவுத் தொழிலாளர்கள் இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு, தொழில்முனைவு மற்றும் மேம்பட்ட வாழ்வாதார வாய்ப்புகளை பெறுவதற்கு எவ்வாறு உதவிடும் என்பதை திரு சஞ்சய் குமாரின் பயணம் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 42 வயதான திரு சஞ்சய் குமார், தனது ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கான நிதிச் சவால்களை எதிர்கொண்டார். ஒரு ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரிந்த அவர், மாதந்தோறும் ரூ 12,000 சம்பளம் பெற்று வந்தார்.
ஒரு ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளியிலிருந்து தொழில்முனைவோராக உருவெடுத்துள்ள அவரது வாழ்க்கைப் பயணம், சுயதொழிலை ஊக்குவிப்பதற்கும், நிதிச் சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கும், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் நமஸ்தே திட்டத்திற்கு உள்ள வலிமையை பிரதிபலிப்பதாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324322®=3&lang=1
***
SS/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324470)
வருகையாளர் எண்ணிக்கை : 13