சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சிறப்பு தூய்மை இயக்கத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தது சுகாதார அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 4:39PM by PIB Chennai
மத்திய அரசின் சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம், தூய்மையை நிறுவனமயமாக்குதல், அரசு அலுவலகங்களில் நிலுவைப் பணிகளைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களுடன், 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை மேற்கொள்ளப்படும் சிறப்பு இயக்கம் 6-ல் தீவிரமாகப் பங்கேற்று வருகிறது.
இதில் இத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை இந்தியா திட்டப் பணிகளை, இணைச் செயலாளரும், இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியுமான திரு எலாங்பாம் ராபர்ட் சிங் இன்று (16.10.2026) ஆய்வு செய்தார். இயக்கத்தின் இலக்குகளை உரிய நேரத்தில் அடைவதை உறுதி செய்வதற்காக, நிலுவையில் உள்ள பணிகளைத் தினசரி கண்காணிப்பதன் முக்கியத்துவத்தையும், துறையின் கீழ் உள்ள அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகள், நிறுவனங்கள், அமைப்புகள், அலுவலகங்களின் தீவிரப் பங்களிப்பையும் அவர் வலியுறுத்தினார்.
மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை ஊக்குவிக்க, இத்துறை இந்த இயக்கத்தின் கீழ் தனது முயற்சிகளை 2026 அக்டோபர் 31 வரை தொடரும்.
மேலும் விவரங்களுக்கு நான் ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324371®=3&lang=1
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2324468)
வருகையாளர் எண்ணிக்கை : 7