நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைப் பராமரிப்பிற்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ், டிஜிட்டல் நிர்வாகம், சேவை வழங்கல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான செயல்பாடுகள்

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2026 3:28PM by PIB Chennai

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம், மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு, பிபிஓ / ஜீவன் பிரமாண் பத்ரா இணையதளம் மூலம் டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கல் நடவடிக்கைகளை  வலுப்படுத்தி வருகிறது.

இத்தகைய முன்முயற்சிகள், எளிதான அணுகல், நிர்வாகத் திறன், வெளிப்படைத்தன்மை, காகிதப் பயன்பாடற்ற நிர்வாக நடைமுறைகளை ஊக்குவிக்கும் சிறப்பு இயக்கம் 6.0-ன் நோக்கங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளன.

இந்த நிறுவனத்தின் மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு, சுகாதார சேவைகளை நிர்வகிப்பதற்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை வழங்குகிறது. இந்த அமைப்பு, நோயாளிகளின் சுயவிவரப் பதிவு, மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சை மற்றும் மருந்து தொடர்பான தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய உதவுகிறது. இதன் மூலம், மருத்துவப் பதிவேடுகளை முறையாகப் பராமரிப்பதும், நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களை எளிதில் பயன்படுத்துவதையும் உறுதி செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324331&reg=3&lang=1   

***

SS/SV/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2324438) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu