குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
மும்பையில் காதி பெருவிழா தொடக்கம் - தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்த தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 2:52PM by PIB Chennai
மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காதி- கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவர் திரு மனோஜ் கோயல், நேற்று (2026 அக்டோபர் 15) வியாழக்கிழமை, மும்பை, வைல் பார்லேயில் உள்ள கேவிஐசி மத்திய அலுவலகத்தில் 'காதி மகோத்சவ்-2026' எனப்படும் காதி பெருவிழாவைத் தொடங்கி வைத்தார். இளம் தலைமுறையினரிடம், காதி பொருட்களைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா, கிராமப்புற தொழில்முனைவோருக்கு புதிய சந்தைகளை உருவாக்கும்.
2026 அக்டோபர் 31 வரை நடைபெறும் காதி மகோத்சவத்தில், காதிப் பொருட்களுக்கு 20% சிறப்புத் தள்ளுபடியும், கிராமத் தொழில் பொருட்களுக்கு 10% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு 12 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 77 அரங்குகளில் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324316®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324432)
வருகையாளர் எண்ணிக்கை : 18