நிலக்கரி அமைச்சகம்
இந்தியச் சுரங்க வார விழா நடைபெறும் தேதிகள் மாற்றம் - 2027 பிப்ரவரி 24 முதல் 26 வரை நடைபெறும் என அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 3:10PM by PIB Chennai
இந்தியச் சுரங்க வார விழா, 2026 நவம்பர் 15 முதல் 17 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அது, 2027 பிப்ரவரி 24 முதல் 26 வரை புதுதில்லியில் உள்ள யசோபூமி மாநாட்டு மையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சுரங்கத் தொழில் துறையினர், கண்காட்சியாளர்கள், அரசுத் தரப்பினர் என பலருடனான கலந்தாலோசனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேதி மாற்றமானது, பல்வேறு அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உலகளாவிய பிரதிநிதிகளின் அதிகபட்ச பங்கேற்பையும் உறுதி செய்யும். பண்டிகைக் காலத்தையும் குளிர்கால காலத்தையும் தவிர்க்கும் வகையில் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வது எளிதாகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும் :https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324321®=3&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324425)
வருகையாளர் எண்ணிக்கை : 7