புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
நகர்ப்புற பெண் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் அதிகரிப்பு காலமுறை தொழிலாளர் ஆய்வறிக்கையில் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 4:00PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தேசிய புள்ளியியல் அலுவலகம் ஆகியவற்றால் நடத்தப்படும் காலமுறை தொழிலாளர் ஆய்வானது தொழிலாளர் பங்களிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை நிலை குறித்த தரவுகளுக்கான முதன்மை ஆதாரமாக உள்ளது.
செப்டம்பர் மாதத்திற்கான ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒட்டுமொத்த தொழிலாளர் பங்களிப்பு விகிதம் (15 வயதுக்கு மேற்பட்டோர்) 55.5 சதவீதமாக இருந்தது. இது செப்டம்பர் 2025-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீத புள்ளிகள் அதிகமாகும்.
நகர்ப்புறங்களில் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் (15 வயதுக்கு மேற்பட்டோர்), ஆகஸ்ட் 2026-ல் இருந்த 50.4 சதவீதத்திலிருந்து, செப்டம்பர் 2026-ல் 50.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்த பெண் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் (15 வயதுக்கு மேற்பட்டோர்), முந்தைய ஆண்டைக் காட்டிலும் 0.5 சதவீத புள்ளிகள் அதிகரித்து, செப்டம்பர் 2026-ல் 34.6 சதவீதத்தை எட்டியுள்ளது. இதே காலகட்டத்தில், கிராமப்புறப் பெண் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 1.0 சதவீத புள்ளி அதிகரித்து, 38.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 2026-ல், ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (15 வயதுக்கு மேற்பட்டோர்) முந்தைய ஆண்டைக் காட்டிலும் 0.3 சதவீதப் புள்ளிகள் அதிகரித்து, 52.7 சதவீதமாக இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323828®=3&lang=1
***
SK/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324415)
வருகையாளர் எண்ணிக்கை : 11