அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவின் உள்நாட்டு குவாண்டம் கம்ப்யூட்டிங் பாதுகாப்பு தொழில்நுட்ப சூழலமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2026 2:50PM by PIB Chennai

குவாண்டம் கப்யூட்டிங் மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களில் இந்தியாவின் திறனை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்  கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், பெங்களூருவைச் சேர்ந்த கியூஎன்யு லேப்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

இதன்படி, ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க நிதியத்தின் கீழ், அந்நிறுவனத்திற்கு ரூ 150 கோடி நிதியுதவி வழங்கப்படும்.

மொத்தம் ரூ 300 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், இந்தியாவின் குவாண்டம் பாதுகாப்பு மற்றும் உணர்திறன் நடவடிக்கைகளுக்கான உள்நாட்டு தொழில்நுட்பக் கட்டமைப்பு உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டம், தொழில்நுட்பத் தயார்நிலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, குவாண்டம்-பாதுகாப்பு, உணர்திறன் தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்கவும், ஒருங்கிணைக்கவும், சரிபார்க்கவும் உதவிடும். இந்த நிதியுதவி, விருப்பத்தின் பேரில் மாற்றத்தக்க கடன் வடிவில் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324307&reg=3&lang=1   

***

SS/SV/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2324390) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी