தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
வேளாண்-உணவு அமைப்புமுறைகளுக்கான செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய முன்முயற்சியின் இரண்டாவது கூட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
10 OCT 2026 6:55PM by PIB Chennai
மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொலைத்தொடர்புத் துறையின் தொலைத்தொடர்பு பொறியியல் மையம் சார்பாக, இந்திய மொபைல் காங்கிரஸ் 2026-ன் ஒரு பகுதியாக, ஐக்கிய நாடுகள் சபையின் வேளாண்-உணவு அமைப்புமுறைகளுக்கான செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய முன்முயற்சியின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்தக் கூட்டம், வேளாண் மற்றும் உணவு அமைப்புமுறைகளில் இணையம் சார்ந்த செயல்பாடுகள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் பயன்பாடு குறித்த உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. சர்வதேச அமைப்புகள், அரசுத் துறைகள், வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வித்துறை, தொழில் துறையைச் சேர்ந்த சுமார் 70 பேர் நேரிலும் 25 பேர் இணையவழியிலும் இதில் பங்கேற்றனர்.
வேளாண்-உணவு அமைப்புமுறைகளுக்கான செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய முன்முயற்சியின் தலைவர் டாக்டர் செபாஸ்டியன் போஸ், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் மூத்த நிபுணர் திரு கிருஷ்ணன் பல்லசனா உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வேளாண் நடைமுறைகளை மாற்றுவதிலும், வேளாண்-உணவு அமைப்புமுறைகளை வலுப்படுத்துவதிலும் செயற்கை நுண்ணறிவு, இணையம் சார்ந்த செயல்பாடுகள், டிஜிட்டல் இணைப்பு ஆகியவற்றின் வளர்ந்து வரும் பங்கை இந்தக் கூட்டம் எடுத்துக்காட்டியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321784®=3&lang=1
***
SS/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324357)
வருகையாளர் எண்ணிக்கை : 9