அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் குறித்த தேசிய மாநாடு
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 2:31PM by PIB Chennai
இந்தியாவில் வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் குறித்த தேசிய மாநாடு, புதுதில்லியில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தொழிநுட்ப மாளிகையில் இன்று (15.10.2026) நடைபெற்றது.
இந்த மாநாட்டில், 12 கருப்பொருள் பிரிவுகளில் நடைபெறும் விவாதங்களின் ஒரு பகுதியாக, தன்னாட்சி அமைப்புகள், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் ஆகியவை இடம்பெற்றன.
இந்த மாநாட்டில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட நித்தி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் அபய் கரண்டிகர் பேசுகையில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கச் சூழலில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் தளத்தை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இது உருவானது என்று கூறினார். இந்த ஆண்டின் கருப்பொருளான அறிவியலை ஊக்குவிக்கும், தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்' என்பது மிகவும் பொருத்தமானது என்று அவர் தெரிவித்தார். ஏனெனில், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக உழைக்கும் ஆக்கப்பூர்வமான சிந்தனை கொண்டவர்கள், அந்த கண்டுபிடிப்புகளைச் சமூகத்திற்குப் பயன்படும் தொழில்நுட்பங்களாக மாற்றுகிறார்கள் என்று பேராசிரியர் அபய் கரண்டிகர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323783®=3&lang=1 ***
KS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324238)
வருகையாளர் எண்ணிக்கை : 8