பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியக் கடற்படையுடன் இணையும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் 'சமர்த்தக்'

இடுகை இடப்பட்ட நாள்: 13 OCT 2026 4:22PM by PIB Chennai

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், லார்சன் & டூப்ரோ  நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'சமர்த்தக்', போர்க்கப்பல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்படவுள்ளது.

நான்கு பன்நோக்கு போர்க்கப்பல்களை இந்தியக் கடற்படையுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளில் இது முதலாவதாகும்.

இக்கப்பல் பணியில் அமர்த்தப்படுவது, பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கான நடவடிக்கையில் குறிப்பிடத்தக்கதாக அமையும்.

இந்த கப்பல் இந்தியக் கடற்படையின் எதிர்காலச் செயல்பாடுகளிலும், உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளிலும், ஒரு முக்கிய அங்கமாகவும், சிறந்த பயன்பாட்டுக் கப்பலாகவும்  திகழும்.

கடல் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள 'சமர்த்தக்' கப்பல், குறைந்த தீவிரத்தன்மை கொண்ட கடல்சார் நடவடிக்கைகள், இலக்குகளை நிறுவுதல் மற்றும் சோதனைகளை மேற்கொள்ளும் தளம், உதவி மற்றும் பேரிடர் நிவாரணம், வரையறுக்கப்பட்ட மருத்துவக் கப்பலாக உருமாற்றம் செய்தல் மற்றும் மீட்புப் பணிகளைச் மேற்கொள்ளுதல் போன்ற பல பணிகளையும் மேற்கொள்ளும் திறன் கொண்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322795&reg=3&lang=1 

***

SK/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324067) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese