பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய மாணவர் படையின் மாநிலப் பிரதிநிதிகள், கூடுதல் தலைமை இயக்குநர்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்புக் கூட்டம்: மத்திய இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 13 OCT 2026 3:51PM by PIB Chennai

வடகிழக்குப்  பகுதிகள், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய இடங்களில் உள்ள தேசிய மாணவர் படை தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதிக்க, மாநிலப் பிரதிநிதிகள், கூடுதல் தலைமை இயக்குநர்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்புக் கூட்டம் அக்டோபர் 15 அன்று குவஹாத்தியில் நடைபெறுகிறது.

பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சகம், தேசிய மாணவர் படை, பங்கேற்கும் மாநில அரசுகளின் மூத்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

தேசிய மாணவர் படையின் விரிவாக்கம், படைவீரர் நலன், பயிற்சி, நிறுவனத்தை வலுப்படுத்துதல், நிர்வாக ரீதியிலானச் சவால்கள் தொடர்பான முக்கிய விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322772&reg=3&lang=1 

***

SK/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324065) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese