ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வீராங்கனை லட்சுமிபாய் ஜான்சி - ஆக்ரா கன்டோன்மென்ட் விரைவு ரயில் மதுரா வரை நீட்டிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2026 12:04PM by PIB Chennai

வீராங்கனை லட்சுமிபாய் ஜான்சி – ஆக்ரா கன்டோன்மன்ட் விரைவு ரயிலை மதுரா வரை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

வீராங்கனை லட்சுமிபாய் ஜான்சி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் 1901 எண் கொண்ட விரைவு ரயில் மதுராவை இரவு 11 மணிக்கு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில் காலை 5:05 மணிக்கு மதுராவில் இருந்து புறப்படும் 1902 எண் கொண்ட விரைவு ரயில் வீராங்கனை லட்சுமிபாய் ஜான்சி சந்திப்பு நிலையத்தை நண்பகல் 12:50 மணிக்கு சென்றடையும் என  ரயில்வே அறிவித்துள்ளது.

விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய வழித்தடத்தின் மூலம் ராஜா கி மண்டி, ரன்குந்தா, தீன் தயாள் தாம், பாட் ஆகிய நிலையங்களில் ரயில் நின்று செல்லும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

வீராங்கனை லட்சுமிபாய் ஜான்சி - ஆக்ரா கன்டோன்மென்ட் இடையே 217 கி.மீ. தூரம் வரை இருந்த வழித்தடம் தற்போது மதுரா வரை 270 கி.மீ. தூரமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314723&reg=3&lang=1

***

TV/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2323942) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Kannada