பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பயிற்சி நிறுவனங்களை மாற்றியமைப்பது குறித்த பயிலரங்கு லக்னோவில் நடைபெற உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2026 10:56AM by PIB Chennai

பயிற்சி நிறுவனங்களை மாற்றியமைப்பது குறித்த பிராந்திய அளவிலான மூன்றாவது பயிலரங்கு லக்னோவில் 2026 அக்டோபர் 23,24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. திறன் மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்த இரண்டு நாள் பயிலரங்கில் கர்மயோகி இயக்கத்தின் கீழ், அரசு பயிற்சி நிறுவனங்களை எவ்வாறு நவீன, திறன் சார்ந்த மேம்பாட்டு நிறுவனங்களாக வளர்ச்சியடையச் செய்வது என்பது குறித்து வடமாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுடன் விவாதிக்கப்பட உள்ளது.

இப்பயிலரங்கை உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னிலையில் தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323670&reg=3&lang=1

***

SS/IR/SM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2323747) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu