பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாறிவரும் போர்முறையின் தன்மைக்கு ஏற்ப, பாதுகாப்பு, கல்வி, தொழில்துறை ஆகியவை இடையே ஒத்துழைப்பு அவசியம்: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2026 8:07PM by PIB Chennai

விரைவான மாற்றம் கண்டு வரும் நவீன போர்முறையின் தன்மைக்கு ஏற்ப, உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, பயன்பாடு, தொடர் மேம்பாட்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில், பாதுகாப்புப் படைகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, கல்வி நிறுவனங்கள், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் தொழில்துறை ஆகியவை இடையே நெருங்கிய ஒத்துழைப்பு தேவை என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுதில்லியில் இன்று (அக்டோபர் 14, 2026) நடைபெற்ற ஐஐடி கான்பூரின் 'கிரேட்டர் தேன் அஸ்' நிதி திரட்டும் பிரச்சாரத்தின் தொடக்க விழாவில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு, தன்னாட்சி அமைப்புகள், ஆளில்லா தளங்கள், மேம்பட்ட தொலையுணர் கருவிகள், இணையப் பாதுகாப்பு,  விண்வெளி சார்ந்த தொழில்நுட்பங்கள் ஆகியவை இராணுவ நடவடிக்கைகளை மறுவடிவமைத்து வருவதால், உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்துவது, உத்திசார் தியாக மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தினார்.

 

தேசியப் பாதுகாப்புக்கும், தொழில்நுட்பத் திறனுக்கும் இடையே வளர்ந்து வரும் தொடர்பை, சுட்டிக்காட்டிய அவர், கல்விசார் ஆராய்ச்சியை செயல்பாட்டு பாதுகாப்புத் தேவைகள், தொழில்துறை தேவைகளுடன் இணைப்பதன் மூலம், ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்கள்  குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டும் வகையில் அமைந்துள்ளது என்றார். ஏனெனில், அறிவு, தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களாகக் கருதாமல், அவற்றின் உருவாக்கத்தில் உறுதியுடன் பங்களிக்கும் ஒரு தேசத்தை, தொழில்நுட்பத் திறன்மிக்க, பொருளாதார ரீதியாகப் போட்டித்தன்மை வாய்ந்த, புதுமையான, தன்னம்பிக்கை கொண்ட நாடாக உருவாக்குவதே இதன் நோக்கம் என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2323554&reg=3&lang=1

(Release ID: 2323554)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2323625) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी