பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி ராணுவ மருத்துவமனையில் (ஆராய்ச்சி & பரிந்துரை) 29 செவிலியர் பயிற்சி மாணவர்கள் ராணுவ செவிலியர் சேவையில் லெப்டினன்ட் அதிகாரிகளாக பதவியேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2026 5:19PM by PIB Chennai

தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனை (ஆராய்ச்சி & பரிந்துரை) செவிலியர் கல்லூரியின் ஒன்பதாம் தொகுதியைச் சேர்ந்த 29 செவிலியர் பயிற்சி மாணவர்கள், அக்டோபர் 14, 2026 அன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ராணுவ செவிலியர் சேவையில்  லெப்டினன்ட் அதிகாரிகளாக முறைப்படி பதவியேற்றனர்.

ராணுவ மருத்துவமனை (ஆராய்ச்சி & பரிந்துரை) தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் அவினாஷ் தாஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் தாஸ், தகுதிவாய்ந்த பயிற்சி மாணவர்களின் சிறப்பான செயல்பாடு, கல்வி சாதனைகளுக்காக அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

மேலும், புதிதாகப் பதவியேற்ற அனைத்து செவிலியர் அதிகாரிகளும், ராணுவ செவிலியர் சேவையின் வளமான நெறிமுறைகள், விழுமியங்கள், கலாச்சாரம், புகழ்பெற்ற மரபுகளை நிலைநிறுத்தும் அதே வேளையில், பணியில் உள்ள ராணுவ வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் முன்மாதிரியான சேவையை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ராணுவ செவிலியர் சேவை, நாட்டிற்கு ஆற்றிய 101 ஆண்டுகால அர்ப்பணிப்பு, கருணை, தன்னலமற்ற சேவைக்காகவும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323375&reg=3&lang=1

(Release ID: 2323375)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2323620) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Urdu