ஜவுளித்துறை அமைச்சகம்
ஐ நா தலைமையகத்தில் இந்தியாவும் மாலியும் உலகப் பருத்தி தினத்தைக் கொண்டாடின
இடுகை இடப்பட்ட நாள்:
09 OCT 2026 8:10AM by PIB Chennai
உலகப் பருத்தி தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (2026 அக்டோபர் 7) நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில், இந்தியா, மாலி ஆகிய நாடுகளின் ஐநா நிரந்தரத் தூதரகங்கள் இணைந்து “நிலைத்தன்மைக்கான பருத்தி: வாழ்வாதாரங்கள், மதிப்புக்கூட்டல், ஒத்துழைப்பு” என்ற கருப்பொருளில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, தீர்மானம் 75/318 மூலம் அக்டோபர் 7-ஐ உலகப் பருத்தி தினமாகப் பிரகடனப்படுத்தியது. இது பல்வேறு நாடுகளில், பொருளாதார வளர்ச்சி, சர்வதேச வர்த்தகம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் பருத்தியின் பங்கை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது. இந்நிகழ்வில், வாழ்வாதாரங்கள், மதிப்புக்கூட்டல், நிலையான வளர்ச்சி இலக்குகள் ஆகியவற்றுக்குப் பருத்தியின் பங்களிப்பு குறித்து பிரதிநிதிகள் விவாதித்தனர்.
ஐ நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான தூதர் ஹரிஷ் பார்வதனேனி, தனது வரவேற்புரையில், மகாத்மா காந்தி பருத்தியையும் ராட்டையையும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புபடுத்தியதை நினைவு கூர்ந்தார்.
ஐ நா சபையில் மாலியின் நிரந்தரப் பிரதிநிதியான தூதர் இசா கோன்ஃபோரு, மாலியின் பொருளாதாரத்தில் பருத்தியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321122®=3&lang=1
***
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323530)
வருகையாளர் எண்ணிக்கை : 7