உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் சிறப்பு இயக்கம் 6-ல் ஈடுபட்டு வருகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 4:37PM by PIB Chennai
மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறும் சிறப்பு இயக்கம் 6-ல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தூய்மைப்படுத்துதல், ஆவண மேலாண்மையை மேம்படுத்துதல், நிலுவையிலுள்ள விவகாரங்களுக்கு தீர்வு காணுதல், அலுவலகப் பகுதி உரிய பயன்பாடாக இருப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த இயக்கத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசுகள், அமைச்சகங்களுக்கு இடையேயான பரிந்துரைகள், நாடாளுமன்ற உறுதிமொழிகள், பிரதமர் அலுவலக பரிந்துரைகள், பொதுமக்களின் குறைகள், குறைதீர்ப்பு மேல்முறையீடுகள் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள குறிப்புகளை கண்டறிந்து தீர்வு காண்பதில் அமைச்சகம் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்கிறது. அத்துடன், அசல் ஆவணங்களை மறுஆய்வு செய்தல், வகைப்படுத்துதல், பதிவு செய்தல், நீக்குதல் ஆகியவற்றின் மூலம் ஆவண மேலாண்மையை மேம்படுத்த இந்த இயக்கம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323296®=3&lang=1
***
TV/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323506)
வருகையாளர் எண்ணிக்கை : 9