தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைந்துபோன அலைபேசிகளை மீட்டெடுப்பதில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2026 6:03PM by PIB Chennai

'சஞ்சார் சாத்தி' இணையதளம், அலைபேசிப் பயனாளர்களை வலுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மத்திய அரசின் மக்கள் நலன் சார்ந்த முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தொலைத்தொடர்புத் துறையால் தொடங்கப்பட்ட மக்களை மையமாகக் கொண்ட முயற்சியாகும்.

இந்த இணையதளம் மூலம் தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட அலைபேசிகளை மீட்டெடுப்பதில் முன்மாதிரியான முயற்சிகளை மேற்கொண்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், காவல் மாவட்டங்கள், காவல் நிலையங்களை மத்திய தொலைத்தொடர்புத் துறை அங்கீகரித்து விருதுகளை வழங்கவுள்ளது.

தொலைத்தொடர்புத் துறையின் சார்பில் நடைபெறவுள்ள தேசிய, மண்டல, மாநில அளவிலான நிகழ்ச்சிகளில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.

தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட அலைபேசிகளைக் கண்டறிந்து மீட்டெடுத்து, அவற்றை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதில் மாநில/யூனியன் பிரதேசக் காவல் துறையினர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323442&reg=3&lang=1

(Release ID: 2323442)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2323499) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी