மருந்துகள் துறை
மருத்துவத் துறையில், ஆராய்ச்சித் திறன்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 3:09PM by PIB Chennai
இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சித் திறன்களை வலுப்படுத்தவும், உலகளவில் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளில், இந்தியாவின் பங்களிப்பை விரிவுபடுத்தவும், ரேபரேலியில் உள்ள தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (நைப்பர்) , ஆஸ்ட்ராசெனெகா இந்தியா போன்ற நிறுவனங்கள் இணைந்துள்ளன.
இந்தக் கூட்டு முயற்சியின் மூலம், சிறு நகரங்களில் மருத்துவப் பரிசோதனைத் திறன்கள் விரிவுபடுத்தப்படும்.
அத்துடன் நாடு முழுவதும் உள்ள 25 வளர்ந்து வரும் ஆராய்ச்சிப் பகுதிகளில், பயிற்சி பெற்ற பணியாளர்கள், ஆய்வுக்குத் தயாரான மையங்கள் உருவாக்கப்படும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று புது தில்லியில், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துகள் துறையின் செயலாளர் திரு மனோஜ் ஜோஷி முன்னிலையில் கையெழுத்தானது.
இந்தக் கூட்டு முயற்சி, நாடு முழுவதும் 1,000 மருத்துவப் பரிசோதனை மையங்களை அமைப்பது உட்பட வலுவான உயிரி-மருந்துகளுக்கான சூழலமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் பயோஃபார்மா சக்தி என்ற திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையை மேலும் முன்னெடுத்துச் செல்கிறது.
இதன் மூலம், 25 மருத்துவப் பரிசோதனை மையங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் திறன்களை மதிப்பிடுதல், இலக்கு சார்ந்த பயிற்சி, வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்குதல், பாதுகாப்பு, பரிசோதனைக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான ஆவணப்படுத்தல் மற்றும் ஆதரவு செயல்முறைகளை வலுப்படுத்துதல் ஆகிய அம்சங்கள் மேம்படுத்தப்படும். மருந்துகள் துறை, தேசிய மருத்துவ ஆராய்ச்சி முன்னுரிமைகளுக்கு ஏற்ப இத்திட்டத்தை செயல்படுத்தி அங்கீகாரம் அளிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323208®=3&lang=1
(Release ID: 2323208)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323492)
வருகையாளர் எண்ணிக்கை : 5