ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல் ஜீவன் இயக்கம் 2.0, விபி-ஜி ராம் ஜி திட்டம் ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்த கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2026 4:15PM by PIB Chennai

ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் வழங்கல் மற்றும் துப்புரவுத் துறை 2026 செப்டம்பர் 1,2 ஆகிய நாட்களில் நடைபெற்ற நீர் குறித்த துறைசார் உச்சி மாநாடு 2026-ன் தொடர்ச்சியாக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் பல்வேறு கருப்பொருள்களில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறது. அதன் ஒரு பகுதியாக, மூன்றாவது காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நீர் ஆதாரங்களின் நிலைத்தன்மை, நீர் பாதுகாப்பு மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமையிலான திட்டமிடல் ஆகியவற்றால் நீடித்த கிராமப்புற குடிநீர் சேவையை அளிப்பதை நோக்கமாக கொண்டு ஜல் ஜீவன் இயக்கம் 2.0, விபி-ஜி ராம் ஜி திட்டம் ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநிலங்களின் பொது சுகாதார துறைகள், கிராமப்புற குடிநீர் விநியோகத் துறைகள், ஊரக வளர்ச்சித் துறைகள், பஞ்சாயத்து ராஜ் துறைகள் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும், மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சக பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323274&reg=3&lang=1

***

TV/IR/SM/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2323484) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी