சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் சிறப்பு தூய்மை இயக்கம் 6.0–இல் ஈடுபட்டு வருகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2026 3:55PM by PIB Chennai

மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் 2026 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை சிறப்பு இயக்கம் 6.0-வில் ஈடுபடுகிறது. தூய்மைப்பணியை மேற்கொள்ளுதல், நிலுவைப்பணிகளைக் குறைத்தல், ஆவண மேலாண்மையை வலுப்படுத்துதல், மின்னணு கழிவு அகற்றலை ஊக்குவித்தல், அமைச்சகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அலுவலகப் பகுதிகளை உரிய முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்தல் ஆகியவை இந்த சிறப்பு இயக்கத்தின் நோக்கமாகும்.

இந்த இயக்கத்தின் கீழ், பணியிடங்களைத் தூய்மைப்படுத்தி தேவையற்ற பொருள்களை அகற்றுதல், காலாவதியான பயன்படுத்த முடியாத பொருட்களையும், கழிவுகளையும் கண்டறிந்து அப்புறப்படுத்துதல், தேவையற்ற பொருள்களை அகற்றி அந்த இடத்தை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்குதல் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323246&reg=3&lang=1

***

TV/IR/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2323460) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी