வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவின் கூட்டறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 5:58PM by PIB Chennai
இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவின் 16-வது கூட்டம் இன்று புது தில்லியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இங்கிலாந்தின் புத்தாக்கம், அறிவியல், வர்த்தகத் துறை அமைச்சர் திரு ஜொனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தியா-இங்கிலாந்து நாடுகளிடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஜனவரி 2022-ல் தொடங்கியதிலிருந்து நடைபெறும் முதலாவது கூட்டுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளிலும் உள்ள வர்த்தகர்களுக்கு ஏற்கனவே பலன்களை அளிக்க இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இது வரும் ஆண்டுகளில் வலுவான, விரிவான பொருளாதார ஒத்துழைப்பிற்க்கான அடித்தளமாகும்.
இங்கிலாந்தின் வடக்குப் பகுதியிலிருந்து ஏழு மேயர்கள், ஒரு ஒருங்கிணைந்த நிர்வாக அமைப்பின் தலைவர் ஆகியோர் இணைந்திருந்ததால், இந்தக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. ஸ்காட்லாந்து, சுற்றுச்சூழல், உணவு, கிராமப்புற விவகாரங்களுக்கான அந்நாட்டு அமைச்சர்களின் பயணங்கள் உட்பட, இரு நாடுகளையும் சேர்ந்த அரசு, வணிகம், பல்கலைக்கழகங்கள், புத்தாக்கத்தை முன்னெடுப்பவர்கள், பிராந்தியத் தலைவர்கள் பங்கேற்ற விரிவான நடவடிக்கைகளுக்கு உதவிடும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322384®=3&lang=1
***
TV/SV/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2323263)
வருகையாளர் எண்ணிக்கை : 7