வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செப்டம்பர் மாதத்திற்கான மொத்த விற்பனை விலை குறியீட்டின் தற்காலிக மதிப்பீடுகள்

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2026 12:00PM by PIB Chennai

செப்டம்பர் மாதத்திற்கான மொத்த விற்பனை விலை குறியீட்டின் (அடிப்படை ஆண்டு 2022-23) தற்காலிக மதிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, ஆகஸ்ட் 2026-ல், 9.92 சதவீதமாக இருந்த அகில இந்திய மொத்த விற்பனை விலை குறியீட்டின் பணவீக்க விகிதம், செப்டம்பர் 2026-ல் வருடாந்திர அடிப்படையில் 11.39 சதவீதமாக உள்ளது. செப்டம்பர் 2026-ல் அனைத்துப் பொருட்களுக்கான குறியீடு 112.5 ஆக உள்ளது. இது ஆகஸ்ட் 2026-ல் 110.8 ஆக இருந்தது.

முதன்மைப் பொருட்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள், மின்சாரம், உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றிற்கான வருடாந்திர பணவீக்க விகிதங்கள் செப்டம்பர் 2026-ல் முறையே 8.67%, 25.85% மற்றும் 9.76% ஆக உள்ளன. இவை ஆகஸ்ட் 2026-ல் முறையே 7.76%, 22.93% மற்றும் 8.37% ஆக இருந்தன. செப்டம்பர் 2026-ல், எரிபொருள், மின்சாரம், உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றிற்கான குறியீடுகள் முறையே 120.3, 110.5 மற்றும் 110.2 ஆக உள்ளன. இவை ஆகஸ்ட் 2026-ல் முறையே 118.1, 108.3 மற்றும் 108.8 ஆக இருந்தன.

பல்வேறு பிரிவுகளில், கனிம எண்ணெய்கள் (பெட்ரோலியப் பொருட்கள் உட்பட), உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி, லிக்னைட் எனப்படும் பழுப்பு நிலக்கரி, அடிப்படை உலோகங்களின் உற்பத்தி, ரசாயனங்கள், ரசாயனப் பொருட்களின் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, ரப்பர், பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, ஆகியவை இதில் அடங்கும். செப்டம்பர் 2026-ல், மொத்த விலை குறியீட்டு பணவீக்க விகித உயர்வுக்கு மின்சார உபகரணங்கள் முக்கிய காரணியாக அமைந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323098&reg=3&lang=1   

***

TV/SV/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2323225) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी