தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மொபைல் செயல்பாட்டுத் தர நிலையை ட்ராய் ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 3:58PM by PIB Chennai

தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் தகவலுக்காக, ஜூலை 2026-ல் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மொபைல் சேவைகளின் தரநிலை குறித்த முடிவுகளை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது.

தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் மொபைல் சேவைகளின் (குரல், தரவு ஆகிய இரண்டிலும்) தர நிலையை  மதிப்பிடுவது, சரிபார்ப்பது ஆகியவையே இந்தச் சோதனையின் நோக்கமாகும்.

இந்தச் சோதனையின்போது, தொலைத்தொடர்பு சேவை சென்றடையும் பகுதிகள், அழைப்பின் துண்டிப்பு விகிதம், அழைப்பின் இணைப்பு விகிதம், தரவு பதிவிறக்கம், பதிவேற்றம்  ஆகியவற்றிற்கான வேகம் போன்ற முக்கிய சேவைகளின் தரநிலை சார்ந்த அளவுருக்களில், சேவை வழங்கும் நிறுவனங்களின் செயல்திறனை ட்ராய் பதிவு செய்துள்ளது. பின்னர், நுகர்வோருக்குத் தகவல்களை வழங்கவும், சேவை வழங்குநர்கள் தங்களது சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கவும், இந்த சோதனை முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

நகரங்கள், முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், பொதுப் போக்குவரத்து மையங்கள் போன்ற பல்வேறு பயன்பாட்டுச் சூழல்களில், அனைத்து சேவை வழங்குநர்களின் மொபைல் சேவைகளின் செயல்திறனை  களத்தில் பதிவு செய்யும் வகையில் இந்த பரிசோதனை நடைமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில், 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களின் சிம் கார்டுகளைப் பயன்படுத்தி நேரடித் தரவு,குரல் அழைப்பு அமர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322247&reg=48&lang=1    

***

SK/SV/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2323222) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Malayalam