சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இமயமலை பகுதியில் வசிப்போர் பயன்பாட்டிற்காக உயர்தர மருத்துவம், ஆராய்ச்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் திரு ஜெ.பி.நட்டா

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 4:03PM by PIB Chennai

இமாச்சல பிரதேசத்தில் உள்ள கெய்லாங் பகுதியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மையத்திற்கு, மத்திய சுகாதார, குடும்பநலத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா அடிக்கல் நாட்டினார். இந்திய மருத்துவம், ஆராய்ச்சி மையம், ராணுவப்படை மருத்துவ சேவை இணைந்து இந்த உயர்தர சிகிச்சை, ஆராய்ச்சி மையத்தை அமைக்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ஜெ.பி.நட்டா, இமயமலை பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில், இந்த உயர்தர மருத்துவமனை அமைய உள்ளதாக தெரிவித்தார். குறைந்த அளவு ஆக்சிஜன், அதிகப்படியான குளிர், அடிக்கடி மாறும் பருவநிலை ஆகியவற்றை எதிர்கொள்ளும் மக்கள் பயன்பெறும் வகையில், இங்கு மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயரமான மலைப்பகுதிகளில் வசிப்போரின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில், ராணுவ வீரர்களின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் கூறினார். இமயமலை பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, உடல்நலம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் எனவும் கூறினார்.  கெய்லாங் பகுதியில் அமையவுள்ள உயர்தர மருத்துவம், ஆராய்ச்சி மையம் மூலம் இமயமலை பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள எல்லை பகுதிகள், இமாச்சல பிரதேசம், லடாக், ஜம்மு, காஷ்மீர், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களும் பயன்பெறுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322248&reg=48&lang=1

 

***

TV/LN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2323140) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi