சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை சார்பில் தூய்மை, ஆவணங்கள் மேலாண்மை பணி
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 3:43PM by PIB Chennai
மத்திய சமூகநீதி, அதிகரமளித்தல் அமைச்சகம் சார்பில், சிறப்பு இயக்கம் 6 என்ற தலைப்பில், தூய்மை பணி, அலுவலக ஆவணங்கள் பராமரிப்பு பணி ஆகியவற்றை மேற்கொண்டது. அந்தவகையில், அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை சுத்தப்படுத்துதல், ஆவணங்களை முறைப்படுத்தி பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக, சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை ஒழுங்குபடுத்தி வைத்ததன் மூலம், ஆவணங்களை எளிதில் அடையாளம் காண முடியும் என்றும், இதனால் விரைவாக பணிகள் நடைபெறும் எனவும் குறிப்பிட்டார். ஆவணங்களை முறைப்படுத்துவது, பணியிடங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம், சிறந்த பணிச்சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறினார். இதுபோன்ற பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாகவும், சமூகநீதி, அதிகாரமளித்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322237®=48&lang=1
***
TV/LN/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2323136)
வருகையாளர் எண்ணிக்கை : 7