இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 8:28PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மும்பையில் உலகளாவிய ஃபின்டெக் திருவிழா 2026-ஐ தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய பிரதமர், உலக நாடுகளைச் சேர்ந்த புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள், தலைவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரை அன்புடன் வரவேற்றார்.
ஃபின்டெக் துறையின் திறன்மிக்க பரிணாம வளர்ச்சியை எடுத்துரைத்த பிரதமர், இத்துறையில் அதிகரித்துவரும் திறன், இளைஞர்களின் பங்கேற்பு, துணிச்சல் ஆகியவற்றால் சாத்தியக்கூறுகளின் எல்லை விரிவடைந்து வருவதாகக் கூறினார். இந்தச் சூழலின் வளர்ச்சி, நாட்டின் எதிர்காலம் குறித்த தனது நம்பிக்கையைத் தொடர்ந்து வலுப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். எனவே, ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவின் எதிர்காலம் குறித்து தனது நம்பிக்கை மேலும் வலுப்பெறுவதாக திரு மோடி கூறினார்.
உலகில் மோதல்கள், வர்த்தகப் பிரச்சனைகள், எரிசக்தி, பொருட்களின் விநியோக முறைகளில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்ட ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் வலுவான 7.8 சதவீத வளர்ச்சியுடன் சர்வதேச பொருளாதார நிச்சயமற்ற தன்மையை ஒப்பிட்டு கூறினார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஜப்பானிய கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் மதிப்பீடுகளை ஏ பிரிவுக்கு உயர்த்தியதை பிரதமர் குறிப்பிட்டார். கட்டமைப்பு சீர்திருத்தங்கள் பேரியல் பொருளாதார நிலைத்தன்மையே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டக் காரணம் என்றும், அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் தொழில்நுட்ப எழுச்சியின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பாராட்டிய பிரதமர், இந்த மாற்றத்தின் மறுக்கமுடியாத அம்சமாக ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகத்தை குறிப்பிட்டார். நிதி தொழில்நுட்பம் பற்றி விவாதிக்கப்படும் போதெல்லாம், யுபிஐ இல்லாமல் அது முழுமையடையாது என்று திரு மோடி குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 25 அன்று கொண்டாடப்பட்ட யுபிஐ-ன் பத்தாவது ஆண்டு விழாவை நினைவுகூர்ந்த பிரதமர், நிதித்துறையினரின் ஆரம்பகால சந்தேகத்தையும், இதற்கு முன்னர் வங்கிச் சேவைகளைப் பெறாத கோடிக்கணக்கான மக்கள் தற்போது டிஜிட்டல் பொருளாதாரத்தை இயக்கும் நிலையையும் ஒப்பிட்டுப் பேசினார். வங்கிச் சேவைகளை விரல் நுனிக்கே கொண்டுவர வேண்டும் என்ற தனது தொடக்ககாலக் கனவு, ஒரு காலத்தில் விவரம் அறிந்தவர்களால் கூட சாத்தியமற்றதாகக் கருதப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். பல தலைமுறைகளாக வங்கிச் சேவைகளின்றி இருந்த அதே கோடிக்கணக்கான மக்கள் நாட்டில் நிதி தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய உந்து சக்திகளாக மாறியுள்ளனர், என்று திரு மோடி குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 24 பில்லியனுக்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார். அதாவது, அந்த நிகழ்வின் முதல் பத்து நிமிடங்களிலேயே சுமார் 50 லட்சம் பரிவர்த்தனைகள் செயலாக்கப்பட்டன என்று கூறினார். இந்த பெருமளவிலான பயன்பாட்டு விகிதம் தொழில்நுட்பத்தையும் கடந்தது என்பதை குறிப்பிட, பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனை மேற்கோள் காட்டினார். இந்தத் தாக்கத்தின் காரணமாகத்தான், யுபிஐ என்பது வெறும் தொழில்நுட்பக் கதை மட்டுமின்றி, அது ஒரு நாகரிகக் கதை என்று அதிபர் திரு மேக்ரோன் குறிப்பிட்டது குறித்து திரு மோடி எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308027®=3&lang=1
***
SS/IR/LDN/RJ