பிரதமர் அலுவலகம்
அரசுத் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்த எத்தியோப்பிய பிரதமர் திரு அபி அகமது அலிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2026 7:17PM by PIB Chennai
அரசுத் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக வாழ்த்து தெரிவித்த எத்தியோப்பிய பிரதமர் திரு அபி அகமது அலிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் திரு அபி அகமது அலிக்கு திரு மோடி தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த டிசம்பர் மாதம் எத்தியோப்பாவிற்குத் தாம் மேற்கொண்ட பயணம் பற்றியும், புதுதில்லியில் பிரதமர் திரு அபி அகமது அலியை அண்மையில் சந்தித்தது குறித்தும் திரு மோடி மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். எத்தியோப்பாவுடனான உத்திசார் கூட்டாண்மைக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறிய அவர், ஒத்துழைப்பையும் நட்புறவையும் வலுப்படுத்த திரு அபி அகமது அலியுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“பிரதமர் திரு அபி அகமது அலி அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. மேலும் பிரதமராக நீங்கள் மீண்டும் பொறுப்பேற்றுள்ளதற்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த டிசம்பர் மாதம் நான் எத்தியோப்பாவிற்கு மேற்கொண்ட பயணத்தையும், புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற நமது சந்திப்பையும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். எத்தியோப்பியாவுடனான உத்திசார் கூட்டாண்மைக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. நமது ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்.
@AbiyAhmedAli”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320940®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2322577)
வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam