பாதுகாப்பு அமைச்சகம்
தரங் சக்தி பயிற்சி கூட்டு நடவடிக்கையின் ஆற்றல், தன்னிறைவில் வலிமை
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 5:42PM by PIB Chennai
ஜோத்பூர் விமானப்படை தளத்தில் 2026 செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 12 வரை, தரங் சக்தி என்ற பெயரில் இந்திய விமானப்படை பயிற்சி நடத்தியது.
இரண்டாவது முறையாக நடைபெறும் இந்தப் பயிற்சி, நட்பு நாடுகளின் விமானப்படைகளுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் நட்புறவிலும், பிராந்திய, உலகளவிலானப் பாதுகாப்பில், இந்தியா முக்கிய நாடாக உருவெடுப்பதிலும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.
கூட்டு நடவடிக்கையின் ஆற்றல் என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இந்த பன்னாட்டு விமானப்படை பயிற்சியில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய ஏழு நட்பு நாடுகளும், 32 பார்வையாளர் நாடுகளும் பங்கேற்றன.
இந்தியாவின் செயல்பாட்டுத் திறன்கள், தொழில்முறை தரநிலைகள் மற்றும் விரிவடைந்து வரும் விண்வெளி, பாதுகாப்புத் துறை சார்ந்த கட்டமைப்பின் மீது சர்வதேச அளவில் அதிகரித்து வரும் ஆர்வத்தை இந்தப் பயிற்சி பிரதிபலிப்பதாக உள்ளது.
அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர் நாடுகளின் பங்கேற்பு, இப்பயிற்சியின் உத்திசார் முக்கியத்துவத்தை மேலும் விரிவுபடுத்தியதுடன், ஆக்கபூர்வமான பாதுகாப்பு உறவுகள், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலுப்படுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322365®=3&lang=1
****
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2322535)
வருகையாளர் எண்ணிக்கை : 4