PIB Backgrounder
பிரதமரின் அதிவிரைவு சக்தி திட்டத்தின் ஐந்து ஆண்டுகள்
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 1:49PM by PIB Chennai
பல்வேறு துறைகள், போக்குவரத்து முறைகளுக்கு இடையே தேவைக்கேற்ற ஒருங்கிணைப்புக்கான உள்கட்டமைப்பை இந்தியா உருவாக்குகிறது. சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், நீர்வழிகள், பொதுப் பயன்பாட்டு வசதிகள் ஆகியவை பெரும்பாலும் ஒரே பிராந்தியங்களில் ஒன்றோடொன்று தொடர்புடவையாகும். இந்த கட்டமைப்புகளை ஒருங்கிணைக்க திட்டமிடுவது, செலவு, நேரம் ஆகியவற்றை சேமித்தல், திட்டங்களை ஒருங்கிணைத்தல், ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பை மிகவும் திறமையாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவும்.
இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், பிரதமரின் அதிவிரைவு தேசிய பெருந்திட்டம் 2021 அக்டோபர் 13 அன்று தொடங்கப்பட்டது. இது, பல்வேறு அமைச்சகங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தரவுகளை, புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையிலான ஒரு பொதுவான தளத்தில் கொண்டு வந்தது.
பிரதமரின் அதிவிரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
ஏழு உள்கட்டமைப்பு இயந்திரங்கள்: சாலைகள், ரயில்வேக்கள், துறைமுகங்கள், நீர்வழிகள், விமான நிலையங்கள், பொதுப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆகியவை இத்திட்டத்தின் முக்கியத் துறைகளாக உள்ளன.
முழுமையான அரசு திட்டமிடல்:
தேசிய பெருந்திட்டம் 58 மத்திய அமைச்சகங்களையும் துறைகளையும், 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியுள்ளது. இது, உள்கட்டமைப்பு பரிந்துரைகளைத் துறைகள் சார்ந்து திட்டமிடவும் மதிப்பீடு செய்யவும் உதவுகிறது.
விரைவான தரவு அணுகல்: பிரதமரின் அதிவிரைவு சக்தி பொதுத் தளம், அங்கீகரிக்கப்பட்ட 230 தரவுத்தொகுப்புகளுக்கான அணுகலை வழங்குகிறது.
தரவு அடுக்குகள்: 2026 அக்டோபர் 12 நிலவரப்படி, 23,493-ம் மேற்பட்ட தரவு அடுக்குகள், உள்கட்டமைப்பு, இதர தொடர்புடைய தகவல்களைப் பொதுவான ஜிஐஎஸ் அடிப்படையிலான தளத்திற்குக் கொண்டு வருகின்றன.
2026 ஆகஸ்ட் 11 நிலவரப்படி நெட்வொர்க் திட்டமிடல் குழு சுமார் ரூ.18.66 லட்சம் கோடி செலவிலான 396 உள்கட்டமைப்பு திட்டங்களை மதிப்பீடு செய்துள்ளது. இவற்றில் 256 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 198 திட்டங்கள் அமலாக்கத்தில் உள்ளன.
பிரதமரின் அதிவிரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் பல்வகை போக்குவரத்து உள்கட்டமைப்புடன், பொருளாதார, சமூக, சரக்குப் போக்குவரத்து முனையங்களையும் வரைபடமாக்குகிறது. இது பொருளாதார மண்டலங்கள், வளர்ச்சி திட்டங்களுக்கு ஆதரவளிக்க தேவைப்படும் உள்கட்டமைப்புகளை கண்டறிய உதவுகிறது.
ஜவுளி, மருந்து உற்பத்தி தொகுப்புகள், பாதுகாப்பு தளவாட உற்பத்தி முனையங்கள், மின்னணுப் பூங்காக்கள், தொழில்துறை வழித்தடங்கள், மீன்பிடித் தொகுப்புகள், வேளாண் மண்டலங்கள் போன்ற பொருளாதார மண்டலங்கள், ஒருங்கிணைந்த உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஆதரவளிக்க வரைபடமாக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, பீகாரில் உள்ள ககாரியா – பூர்ணியா வழித்தடம், 11 சரக்குப் போக்குவரத்து முனையங்களுடன் ஜவுளித் தொகுப்பு, பெரிய உணவுப் பூங்காக்கள், மீன் / கடல் உணவுப் பூங்காக்கள் உட்பட ஐந்து பிரதமரின் அதிவிரைவு சக்தி பொருளாதார முனையங்களை இணைக்க திட்டமிடப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322164®=48&lang=1
***
SS/IR/LDN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2322435)
வருகையாளர் எண்ணிக்கை : 9