அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மருந்து ஆராய்ச்சி, மேம்பாட்டுக்காக ரூ.86 கோடியில் ஒப்பந்தம் செயற்கை

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 10:52AM by PIB Chennai

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மருந்து ஆராய்ச்சி செய்வது தொடர்பாக, மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், பெங்களூருவை சேர்ந்த பெப்ட்ரிஸ் என்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் ரூ.86 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. புதிய மருந்துகள் ஆராய்ச்சி, மருந்துகளை மேம்படுத்துவது, நோய்கள் குறித்த ஆய்வு, சிகிச்சை முறை, சிகிச்சை மையங்களை மேம்படுத்துவது ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இந்நிகழ்ச்சியில் பேசிய தொழிநுட்ப மேம்பாட்டு வாரியச் செயலாளர் திரு ராஜேஷ்குமார் பதக், புதிய மருந்துகளைக் கண்டறிவதுடன், மருந்துகளை மேம்படுத்துதற்கும் செயற்கை நுண்ணறிவு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். உயிரி வேதியியல், சுகாதாரத் திட்டங்களில் புதுமையைப் புகுத்துதல் போன்ற நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளதாகவும் கூறினார்.    

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322077&reg=48&lang=1

***

SS/LN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2322279) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu