பிரதமர் அலுவலகம்
அரசின் தலைமைப் பொறுப்பிலிருந்து நாட்டிற்கு 25 ஆண்டுகள் சேவையாற்றியதற்காக கஜகஸ்தான் அதிபர் தெரிவித்த வாழ்த்துகளுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2026 7:11PM by PIB Chennai
அரசின் தலைமைப் பொறுப்பிலிருந்து நாட்டிற்கு 25 ஆண்டுகள் சேவையாற்றியதற்காக, கஜகஸ்தான் அதிபர் திரு காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் தெரிவித்த அன்பான வாழ்த்துகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
கஜகஸ்தான் நாட்டுடனான நெருங்கிய நட்பு, உத்திசார் ஒத்துழைப்பை மிகவும் மதிப்பதாகவும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"அதிபர் டோகாயேவ் அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. கஜகஸ்தான் நாட்டுடனான நமது நெருங்கிய நட்பையும், உத்திசார் ஒத்துழைப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன். நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், ஆழப்படுத்தவும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்."
***
(Release ID: 2320936)
TV/SV/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322218)
வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam