மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இளைஞர் சந்திப்பு நிகழ்வின் ஏழாம் கட்டப் பயணத்தின்போது, உத்தரகாண்ட் பிரதிநிதிகள் குழு மேற்கு வங்க ஆளுநர் திரு ஆர்.என். ரவியுடன் கலந்துரையாடியது

இடுகை இடப்பட்ட நாள்: 11 OCT 2026 1:37PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை, நாட்டின் இளைஞர்களிடையே தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதையும், மக்கள் தொடர்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ஒரே பாரதம் உன்னத பாரதம் முயற்சியின் கீழ் 'யுவ சங்கம்' எனப்படும் இளையோர் சந்திப்பு நிகழ்வை நடத்தி வருகிறது. இது, பன்முகத்தன்மைக்கு மத்தியில் தேசத்தின் ஒற்றுமை குறித்த அவர்களின் மதிப்பீட்டை ஆழப்படுத்துகிறது.

இதன் ஏழாம் கட்டத்தில் உத்தரகாண்ட் தூதுக்குழுவின் மேற்கு வங்கப் பயணம், 2026 அக்டோபர் 7 அன்று தொடங்கியது.

இந்தப் பயணத்தின் போது, பிரதிநிதிகள் 8 அக்டோபர் 2026 அன்று மேற்கு வங்க ஆளுநர் திரு ஆர்.என். ரவியுடன் கலந்துரையாடினர். அப்போது, கற்றல், கலாச்சாரப் பரிமாற்றம், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களிடையே தொடர்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட்டனர்.

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைப்பதன் மூலம், ஒன்றுபட்ட இந்தியா என்ற பார்வையை யுவ சங்கம் மேலும் வலுப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321918&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2321997) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese