இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு - ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றவர்கள் நாளை பங்கேற்கின்றனர்
இடுகை இடப்பட்ட நாள்:
10 OCT 2026 1:08PM by PIB Chennai
உடற்தகுதி, இளைஞர் மேம்பாடு, போதைப்பொருள் இல்லாத இந்தியா ஆகிய பிரச்சாரங்களை வலுப்படுத்தும் வகையில், 'ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்' எனப்படும் ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வின் 94-வது பதிப்பு, 2026 அக்டோபர் 11 அன்று நடைபெறுகிறது. வாரணாசியில், நமோ படித்துறை முதல் சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் தீக்ஷா மண்டபம் வரையிலான வழித்தடத்தில் நாளை காலை 6:00 மணி முதல் நடைபெறும் நிகழ்வு, “வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். மேலும், 2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கள் சிறப்பான செயல்பாடுகளால் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் சிலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். பிராச்சி சௌத்ரி, பருல் சௌத்ரி, ஜெய் குமார், ராஜ் குமார் பால் போன்ற வீரர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
அவர்களின் பங்கேற்பு, இந்நிகழ்ச்சிக்கு ஒரு சிறப்பான விளையாட்டுப் பரிமாணத்தைக் கொண்டுவருவதோடு, வீரர்களுடன் பழகுவதற்கான வாய்ப்பையும் பங்கேற்பாளர்களுக்கு வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321675®=3&lang=1
(Release ID : 2321675)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2321724)
வருகையாளர் எண்ணிக்கை : 14