கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் பரிசுப் பொருட்கள் மின்-ஏலத்தில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அற்புதமான 18 பொருட்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 09 OCT 2026 2:22PM by PIB Chennai

பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் மின் ஏலத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 பொருட்கள், அம்மாநிலத்தின் கலாச்சாரப் பாரம்பரியம், பாரம்பரியக் கைவினைப் பொருட்கள், சாதனைகள் ஆகியவற்றைப் பறைசாற்றுகின்றன.

இந்தத் தொகுப்பில், கிராமப்புற வாழ்க்கையையும் பாரம்பரிய கைவினைத்திறனையும் பிரதிபலிக்கும் கொண்டபள்ளி மர மாட்டு வண்டி , பிரதமரின் புகைப்பட அச்சு இடம்பெற்ற கலம்காரி துணி, ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திரா நினைவுப் பரிசு ஆகியவை அடங்கும். இந்தப் பொருட்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, மாநிலத்தின் நாட்டுப்புறக் கலை, ஜவுளி மரபுகள், கலாச்சார வரலாற்றைப் பிரதிபலிக்கின்றன.

மின்-ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இது 2026 அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் https://pmmementos.gov.in என்ற தளத்தில் பார்வையிட்டு ஏலத்தில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321268&reg=48&lang=2

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2321524) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu_Vw , Telugu